| உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல் |
| வேறு |
| ஆண்டவன் தருபொருள் அனைத்துயிர்க்கும் பொதுவே |
176 | நாதனே யுயர்வாந் தந்தை நரரெலா மன்னான் சேயர் பூதலப் பொருள்கள் யார்க்கும் பொதுமையல் லாது சொந்தச் சாதனப் பொருள்போற் செப்புச் சாசனம் பெற்றோ ரில்லை ஆதலில் தாழ்ந்தோர் தம்மை யருஞ்செல்வர் தாங்கல் மாண்பே. |
|
| ஆண்டவனே எல்லோர்க்கும் சிறந்த தந்தை. மக்களெல்லாம் அவன் பிள்ளைகள். உலகப்பொருள்கள் எல்லோர்க்கும் பொது. இவ்வாறன்றிப் பொருள்களைத் தங்கட்கே உரிய கருவிபோல் செப்பேட்டில் எழுதி ஆவணம் பெற்றவர்கள் இல்லை. ஆதலால், செல்வர் தொழிலாளர்களை வேண்டுவன கொடுத்துக் காத்தல் உயர்வாகும். |
| நாதன்-ஆண் டவன். நரர்-மக்கள். சேய்-பிள்ளைகள். சாதனம்-கருவி. சாசனம்-ஆவணம். மாண்பு-உயர்வு. |
| 2 |
| முறைநலம் கல்வியுளோர் மூத்தோ ராவர் |
177 | நயமறங் கல்வியின்றி நனிநிதி யாற்கு லத்தால் வயதினாற் பெரிய ரென்னல் மைந்தர்தந் தையின்றோ ளேறி இயலித்தாம் பெரியோ ரென்ன இயம்பலுங் காலை மாலை உயர்நிழ லுள்ளோர்தம்மை யுயர்ந்தவ ரெனலு மொப்பே. |
|
| முறை நன்மை படிப்பு முதலிய உயிர்க்குத் துணையாகும் பொருள்கள் இன்றி உடலுக்குத் துணையாம் பெருஞ்செல்வத்தால் பிறப்பால் ஆண்டால் தம்மைப் பெரியவரென்று சொல்லிக்கொள்வது, பிள்ளைகள் தந்தையின் தோள்மேலேறித் தங்களைப் பெரியவராகச் சொல்லுவதையும், காலையிலும் மாலையிலும் தங்கள் நிழல் நீண்டிருப்பதைப் பார்த்துத் தாங்களே பெரியவர்கள் என்று கூறுவதையும் ஒக்கும். |
| நயம்-முறை. (நீதி) நனி-மிகுதி. குலம்-பிறப்பு. வயது-அகவை.; ஆண்டு. |
| 3 |