| நீதி நூல் |
| செல்வமும் வறுமையும் மறி மாறிச் செல்லும் |
178 | ஏலிராட் டினவூ ணேரியே சுற்றுங் காலை மேலவர் கீழுங் கீழோர் மேலுமாய்ச் சுழலல் போல ஞாலமீ தின்று யர்ந்தோர் நாளையே வறிய ராவர் சீலநெஞ் சினர்கீ ழோரைச் சினந்திக ழார்கள் மாதோ. |
|
| மேலும்கீழும் சுழன்று இயலும் இராட்டின ஊஞ்சற்கண் ஏறிச் சுற்றுங்கால் மேல்தட்டிலுள்ளோர் கீழும், கீழ்த்தட்டிலுள்ளோர் மேலுமாய்ச் சுற்றுவதுபோல இன்று செல்வத்தாலுயர்ந்தோர் நாளை ஏழையாவர். ஆயின், அன்பொழுக்கமுள்ள மனத்தர் தொழிலாளர்களைச் சினந்து தாழ்வுபடுத்தார். |
| ஏல்-இயல். சீலம்-அன்பொழுக்கம். இகழ்வு-தாழ்வு. |
| 4 |
| எல்லோரும் உடன்பிறப்பே இயலு கருமுறையால் |
179 | மக்கள்யா வருமோ ரன்னை வயிற்றிடை யுதித்த தாலிச் சக்கரந் தனி லெல்லாருஞ் சகோதர ராவர் சீரின் மிக்கவர் தாழ்ந்தோ ரென்னல் வெறும்பொய்யா மேன்மை யென்பது ஒக்கவே பிறப்பி றப்பி லுறுங்கொலோ வுரையாய் நெஞ்சே. |
|
| மக்கள் எல்லோருந் தாய்வயிற்றினின்றே தோன்றுதலால் பிறப்பு முறையில் எல்லாரும் உடன் பிறந்தாரேயாவர். பிறப்பால் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று கூறிக்கொள்வது வெறும் பொய்யாகும். மேன்மை என்பது தாந்தாம் செய்துகொள்ளும் நல்லொழுக்கங்களாலே உண்டாம். பிறப்பு இறப்பால் உண்டாவதில்லை. |
| சக்கரம்-பிறப்பு. |
| 5 |
| ஏவலரை இகழ்வோர் எய்தார் இறையடி |
180 | சிலதரு நரரே யங்கஞ் சீவனெஞ் சவர்க்கு முண்டாம் நலநவை யின்ப துன்ப நானிலத் துளஅ வர்க்கும் நிலமிசை யவரைச் செய்தோன் நித்தனே யவரை யேதும் புலனிலாப் பொருள்போ லெள்ளும் புல்லர்வீ டில்லர் மாதோ. |
|