பக்கம் எண் :

89

  உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல்
 
  ஏவல் செய்வோரும் மக்களே; அவர்க்கும் உறுப்பு உயிர் உள்ளம் உண்டு. நன்மை தீமை இன்பதுன்பம் முதலியனவும் நானிலத்து முண்டு. அவரைப்படைப்பித்தோனும் முழுமுதலே. ஆதலால், வேலைசெய்வோரை அறிவிலாப்பொருள்போல் இகழும் கீழோர் இறைவன் பேரின்பத்தை எய்தார்.
  சிலதர்-ஏவல்செய்வோர். நரர்-மக்கள். நவை-தீமை. நானிலம்-குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஆகிய நான்கு பிரிவினவாகிய உலகம்.
 

6

  எல்லாரும் உழைத்து வாழ்வதே இயல்பு
181
கொற்றவர் நரர்க் குழைத்துக் கூலியா மிறையைக் கொள்வர்
மற்றவ ரெவருந் தம்மெய் வருந்தவே யுழைப்பர் செல்வம்
பெற்றவர் களுமு ழைப்பர் பின்னவர்க் குழைப்பர் சேடர்
உற்றவித் தன்மை யுன்னி னுழையரார் தலைவ ராரே.
  மன்னர் குடிகளாகிய மக்களுக்குக் காவலாகிய உழைப்பினை உழைத்து அதற்குக் கூலியாகிய வரியை வாங்குவர். மற்றவர்களும் தம்மெய்வருந்த வுழைப்பர். செல்வர்கள் முன் உழைத்தே செல்வர்களானார்கள். வேலையாட்கள் செல்வர்களுக்குப் பின் நின்று வேலை செய்வர். இந்த முறையால் எல்லோரும் உழைப்பவர்களே. ஆதலின், வேலைசெய்வோர் யார்? தலைவர் யார்? (எல்லோரும் வேலை செய்வோரே.)
  கொற்றவர்-மன்னர். இறை-வரி. சேடர்-ஏவல் செய்வோர்.
 

7

  எல்லோர்க்கும் ஈயவே இறைசெல்வம் அருளினன்
182
உடலுறுப் புகள்மேல் கீழென்
   றுன்னிடா தோம்பல் போலுந்
தடமலை கொண்ட நீரைத்
   தாழ்தரைக் களித்தல் போலுந்
தொடர்புறு மேலோர் தங்கைத்
   தோய்நிதி யாவுந் தாழ்ந்தோர்க்
கிடவெனக் கடவுள் ஈந்த
   தெனநினைந் திடுவர் மாதோ.