| நீதி நூல் |
| உடலில் காணப்படும் மெய், வாய், கண், மூக்குச் செவி முதலியவைகளையும், கை, கால், வாய், கருவாய், எருவாய், முதலியவைகளையும் ஒப்பப் பாதுகாத்தலும், பெரியமலை தன்பாற் கொண்டமழை நீரைத் தாழ்ந்த தரைக்கு வலியக்கொடுப்பதும் போன்று, உயர்ந்தோர் கடவுள் தம்பால் அருளிய செல்வமுற்றும் தாழ்ந்தோர்க்கு இடவென எண்ணி எல்லோர்க்கும் வரையாது வழங்குவர். |
| 8 |
| உழையரை வருத்துவோர் உயர்ந்தோர் ஆகார் |
183 | என்றுமெய் வருந்த வேலை இயற்றுவோர்க் குயர்ந்தோர் அற்பப் பொன்றனை ஈவர் செட்டுப் புரிகின்ற வணிக ரென்ன ஒன்றுகொண் டொன்றை யீவோர் உழையரில் தாமு யர்ந்தோர் என்றுகொள் எண்ணம் திண்ணம் என்னலெவ் வண்ணம் அம்மா. |
|
| எந்நாளிலும் உடல் வருந்த உழைக்கும் வேலையாட்களுக்கு வேலைவாங்கும் உயர்ந்தோர்கள் குறைந்தகூலி கொடுக்கின்றனர். நயமே கருதும் கொண்டு விற்பாரைப்போல் வேலை வாங்கிக்கொண்டு சிறிது கூலி கொடுப்போர் வேலையாட்களிலும் தாம் உயர்ந்தோர் என்று கொள்ளுதல் எப்படிப் பொருந்தும்? (பொருந்தாது) |
| செட்டு-நயம்; ஊதியம். உழையர்-வேலை செய்வோர். |
| 9 |
| உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று உரைப்பது மயக்கே |
184 | ஒளிமுடி யொடும்பி றந்தே உலகமாண் டவரும் இல்லை எளியராய் ஓடொன் றேந்தி இங்குதித் தவரும் இல்லை குளிர்கட லுடுத்த பாரில் குறைந்தவர் மேலோர் என்னல் வெளிமயக் கன்றிச் சற்றும் மெய்யல வுணர்வாய் நெஞ்சே. |
|
| மனமே! விளக்கமிக்க மணி அழுத்திய முடியுடன் பிறந்து நாடு ஆண்டவரும் இலர். கையில் ஓடேந்திப் பிறந்து வறுமையை மேற்கொண்டவரும் இலர். கடல் சூழ்ந்த இவ்வுலகில் தாழ்ந் |