பக்கம் எண் :

91

  உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல்
 
  தோர் உயர்ந்தோர் என்று பாகுபடுத்திக் கூறுவது உண்மை அல்லாத வெளி மயக்கமே ஆகும்.
  கடலுடுத்த-கடல் சூழ்ந்த. பார்-உலகம்.
 

10

  அறவோரைத் தக்கோர் அனைவருந் தாங்குவர்
185
அமலனே எவர்க்குங் கத்தன் அவற்கர சருமில் லாருஞ்
சமமலாற் பேத மில்லை தரித்திரர் அறத்தோ ராயின்
அமரரா குவரன் னார்தாள் பொடியையும் அரச ரொவ்வார்
தமரெனத் தாழ்ந்தோர் தம்மைத் தகையினர் தாங்கு வாரால்.
  மாசற்ற கடவுளே எல்லோருக்கும் முதல்வராவர். அவருக்கு அரசரும் வறியரும் ஒன்றேயன்றி வேறுபாடின்று. வறியவர் நன்மையுடையவரானால் தேவராவார். அவர்களுடைய காலிற் பட்ட துகளுக்கும் அரசர் ஒப்பாகமாட்டார். நற்பண்புள்ளவர் வறியவரைத் தம்மவர்களே என்று காப்பாற்றுவார்.
  அமலன்-மாசற்றவன், கடவுள். சமம்-ஒப்பு. பேதம்-வேறுபாடு.
 

11

  பகலவன்போற் செல்வர் பலர்க்கும் பயனாவர்
186
சுடரவன் விளங்கிற் பூமி சோதியாம் விளங்கி லானேற்
புடவியு மிருளா மன்ன வாறுபோல் திருவோர் செல்லு
நடவையின் தாழ்ந்தோர் மேவி நடத்தலால் வரைமே லேற்றும்
அடர்சுடர் விளக்கிற் செல்வ ரறத்தராய்ச் சிறத்தல் நன்றே.
  ஞாயிறு விளங்குமானால் நிலமும் ஒளியுடன் விளங்கும். அது விளங்காவிட்டால் நிலமும் இருளாய் இருக்கும். அதுபோல் செல்வர் நடக்கும் வழியில் அவர்கள் விளக்கத்தில் வறியவர்களும் நடக்கின்றார்கள். ஆதலால், செல்வர்கள் மலைமேலிட்ட பெருவிளக்குபோல் எல்லோருக்கும் நன்மை செய்பவராய் மேன்மை எய்துதல் நன்று.
  சுடரவன்-ஞாயிறு. சோதி-ஒளி. நடவை-வழி. வரை-மலை. சிறத்தல்-மேன்மை எய்துதல்.
 

12