தக்க தலை யோட்டில் முளைத்து எழுந்த சிக்கின் மயிரைத் திரள் முகி லென்றும் சொற்பல பேசித் துதித்து நீங்கள் நச்சிச் செல்லும் நரக வாயில் தோலும் இறைச்சியும் துதைந்து சீப்பாயும் | 45 |
| | |
காமப் பாழி; கருவிளை கழனி; தூமைக் கடவழி; தொளைபெறு வாயில்; எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி! மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்; நச்சிக் காமுக நாய்தான் என்றும் | 50 |
| | |
இச்சித் திருக்கும் இடைகழி வாயில்; திங்கள் சடையோன் திருவருள் இல்லார் தங்கித் திரியும் சவலைப் பெருவழி; புண் இது என்று புடவையை மூடி உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண்; | 55 |
| | |
மால்கொண்டு அறியா மாந்தர் புகும்வழி; நோய் கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி; தருக்கிய காமுகர் சாரும் படுகுழி; செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி; பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி; | 60 |
| | |
மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே சலம்சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்; இத்தை நீங்கள் இனிது என வேண்டா; பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி மெச்சிச் சிவபத வீடருள் பவனை | 65 |
| | |
முத்தி நாதனை மூவா முதல்வனை அண்டர் அண்டமும் அனைத்துள புவனமும் கண்ட அண்ணலைக் கச்சியிற் கடவுளை ஏக நாதனை இணையடி இறைஞ்சுமின் போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே! | 70 |