திருவேகம்பமாலை அறந்தான் இயற்றும் அவனிலுங்கோடி அதிகமில்லம் துறந்தான் அவனிற் சதகோடிஉள்ளத் துறவுடையோன் மறந்தான் அறக்கற் றறிவோடிருந்திரு வாதனையற்று இருந்தான் பெருமையை என் சொல்லுவேன் கச்சியேகம்பனே. | 1 |
| | |
கட்டிஅணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன் வெட்டிமுறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால் கொட்டிமுழக்கி அழுவார் மயானங் குறுகியப்பால் எட்டியடி வைப்பரோ இறைவாகச்சி யேகம்பனே. | 2 |
| | |
கைப்பிடிநாயகன் தூங்கையிலேயவன் கையையெடுத்து அப்புறந்தன்னில் அசையாமல் முன் வைத்தயல் வளவில் ஒப்புடன் சென்று துயினீத்துப் பின்வந் துறங்குவளை எப்படி நானம்புவேன் இறைவாகச்சி யேகம்பனே. | 3 |
| | |
நன்னாரிற்பூட்டிய சூத்திரப்பாவைநன் னார்தப்பினால் தன்னாலுமாடிச் சலித்திடுமோஅந்தத் தன்மையைப்போல் உன்னா லியானுந் திரிவதல்லான் மற்றுனைப்பிரிந்தால் என்னா லிங்காவதுண்டோ இறைவாகச்சி யேகம்பனே | 4 |
| | |
நல்லரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும் இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும் எல்லாம் வெளிமயக்கே இறைவாகச்சி யேகம்பனே. | 5 |
| | |
பொல்லா தவனெறி நில்லா தவனைப் புலன்கடமை வெல்லா தவன்கல்வி கல்லாதவன் மெய் யடியவர்பால் செல்லா தவனுண்மை சொல்லா தவனின் திருவடிக்கன்பு இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன்கச்சி ஏகம்பனே. | 6 |
| | |
பிறக்கும்பொழுது கொடுபோதில்லைப் பிறந்துமண்மேல் இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடைநடுவில் குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த தென்று கொடுக்கறியாது இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே. | 7 |