பறந்துஉழன் றேதடு மாறிப்பொன்தேடியப் பாவையர்க்கீந்து இறந்திட வோபணித்தா யிறைவாகச்சி ஏகம்பனே. | 30 |
| | |
பூதங்க ளற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப் பேதங் குணமற்றுப் பேராசை தானற்றுப் பின்முனற்றுக் காதங் கரணங் களுமற்ற ஆனந்தக் காட்சியிலே ஏதங் களைந்திருப்பேன் இறைவாகச்சி ஏகம்பனே. | 31 |
| | |
நல்லாய்எனக்கு மனுவொன்று தந்தருள் ஞானமிலாப் பொல்லா எனைக்கொன்று போடும் பொழுதியல் பூசைசெபம் சொல்லார் நற்கோயில் நியமம் பலவகைத் தோத்திரமும் எல்லாமுடிந்தபின் கொல்லுகண் டாய்கச்சி ஏகம்பனே. | 32 |
| | |
சடக்கடத் துக்கிரை தேடிப்பலவுயிர் தம்மைக்கொன்று விடக்கடித் துக்கொண்டு இறுமாந்திருந்து மிகமெலிந்து படக்கடித் தின்றுழல் வார்கடமைக்கரம் பற்றிநமன் இடக்கடிக்கும் பொழுதேது செய்வார்கச்சி ஏகம்பனே. | 33 |
| | |
நாறுமுடலை நரிப்பொதிச் சோற்றினை நான்தினமுஞ் சோறுங்கறியும் நிரப்பியபாண்டத்தைத் தோகையர்தங் கூறுமலமும் இரத்த முஞ்சோறுங் குழியில் விழாது ஏறும்படி யருள்வாய் இறைவா கச்சி ஏகம்பனே. | 34 |
| | |
சொக்கிட் டரண்மனைப் புக்குட் டிருடிய துட்டர்வந்து திக்குற்ற மன்னரைக் கேட்பது பொற்சிவ நிந்தைசெய்து மிக்குக் குருலிங்க சங்கமம் நிந்தித்து வீடிச்சிக்கும் எக்குப் பெருத்தவர்க் கென்சொல்லுவேன்கச்சி ஏகம்பனே. | 35 |
| | |
விருந்தாக வந்தவர் தங்களுக்கன்னம் மிகக் கொடுக்கப் பொருந்தார் வளம்பெற வாழ்வார் நின்னாமத்தை போற்றி நித்தம் அருந்தா முலைப்பங்கர் என்னாத பாதகர் அம்புவியில் இருந்தாவ தேதுகண்டாய் இறைவாகச்சி ஏகம்பனே. | 36 |
| | |
எல்லாம்அறிந்து படித்தே இருந்தெமக்கு உள்ளபடி வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச் சொல்லால் மலைந்துறு சூழ் விதியின்படி துக்கித்துப்பின் எல்லாம் சிவன்செயலே என்பர்காண்கச்சி ஏகம்பனே. | 37 |