| | ஈயும் எறும்பும் புகுகின்ற யோனிக்கு இரவுபகல் மாயும் மனிதரை மாயாமல் வைக்கமருந்தில்லையே ! |
| | |
| 15. | சீதப் பனிக்குண்டு சிக்கெனக் கந்தை; தினம் இரந்து நீ துய்க்கச் சோறு மனைதோறும் உண்டு, நினைவெழுந்தால் வீதிக்கு நல்ல விலைமாதர் உண்டு; இந்த மேதினியில் ஏதுக்கு நீசலித்தாய் மனமே என்றும் புண்படவே? |
| | |
| 16. | ஆறுண்டு; தோப்புண்டு; அணிவீதி அம்பலம் தானு முண்டு; நீறுண்டு; கந்தை நெடுங்கோ வணமுண்டு; நித்தம் நித்தம் மாறுண்டு உலாவி மயங்கும் நெஞ்சே! மனைதோறும் சென்று சோறுண்டு தூங்கிப் பின் சும்மா இருக்கச் சுகமும் உண்டே! |
| | |
| 17. | உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று வெய்யில் ஒடுங்கி வந்தால் தடுக்கப் பழையவொரு வேட்டியுண்டு; சகம் முழுதும் படுக்கப் புறந்திண்ணை யெங்கெங்கு முண்டு; பசித்து வந்தால் கொடுக்கச் சிவனுண்டு; நெஞ்சே! நமக்குக் குறைவில்லையே! |
| | |
| 18. | மாடுண்டு; கன்றுண்டு; மக்களுண்டு என்று மகிழ்வதெல்லாம் கேடுண்டு எனும்படி கேட்டு விட்டோம் இனிக் கேள்மனமே! ஓடுண்டு; கந்தையுண் டுள்ளேயெழுத் தைந்தும் ஓதவுண்டு தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையு முண்டே! |
| | |
| 19. | மாத்தா னவத்தையும் மாயா புரியின் மயக்கத்தையும் நீத்தார் தமக்கொரு நிட்டையுண்டோ? நித்தன் அன்பு கொண்டு வேர்த்தால் குளித்துப் பசித்தால் புசித்து விழி துயின்று பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே ! |
| | |
| 20. | ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம் அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு மனமே உனக்கே உபதேச மிதே. |
| | |
| 21. | நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்பு பொம்மல் ஆட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்த சந்தைக் கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர் ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசமிதே ! |