| 44. | நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆக நீதிநெறி ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்த்ர யோகநிலை நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே. |
| | |
| 45. | நான் எத்தனை புத்தி சொன்னாலும் கேட்கிலை நன்னெஞ்சமே ஏன் இப்படிகெட் டுழலுகின்றாய்? இனி ஏதுமில்லா வானத்தின் மீனுக்கு வன் தூண்டில் இட்ட வகையதுபோல் போனத்தை மீள நினைக்கின்றனை என்ன புத்தியிதே ! |
| | |
| 46. | அஞ்சக் கரமெனுங் கோடாலி கொண்டிந்த ஐம்புலனாம் வஞ்சப் புலக்கட்டை வேர் அறவெட்டி வளங்கள் செய்து விஞ்சத் திருத்திச் சதாசிவம் என்கின்ற வித்தையிட்டுப் புன்செக் களை பறித்தேன் வளர்த்தேன் சிவ போகத்தையே ! |
| | |
| 47. | தாயாரும் சுற்றமும் பெண்டிரும் கைவிட்டுத் தாழ்ந்திடுநாள் “நீயாரு ? நானார்?” எனப்பகர் வார் அந்த நேரத்திலே நோயாரும் வந்து குடிகொள்வரே கொண்ட நோயும் ஒரு பாயாரும் நீயுமல்லால் பின்னையேது நட் பாமுடலே |
| | |
| 48. | ஆயும் பொழுது மயிர்க்கால்கள் தோறும் அரும் கிருமி நோயும் மலக்குட்டையாகிய காயத்தைச் சுட்டுவிட்டால் பேயும் நடனம் இடும் கடமாம் என்று பேசுவதை நீயும் அறிந்திலையோ? பொருள் தேட நினைந்தனையே |
| | |
| 49. | பூணும் பணிக்கல்ல பொன்னுக்குத் தானல்ல பூமிதனைக் காணும் படிக்கல்ல மங்கையர்க்கல்ல நற் காட்சிக்கல்ல சேணுங் கடந்த சிவனடிக் கல்ல என் சிந்தை கெட்டுச் சாணும் வளர்க்க அடியேன் படுந்துயர் சற்றல்லவே ! |
| | |
| 50. | வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனி முடிந்து கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே? |
| | |
| 51. | எரு முட்டை பிட்கில் உதிர்ந்திடும் செல்லுக்கு எவர் அழுவார்? கருமுட்டை புக்குக் கழலகன் றீர்கன துக்கமதாய்ப் |