| | ஆப்புஅதனை அசைத்துவிட்ட குரங்கனைப் போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே. |
| | |
66. | அறுசீர் விருத்தம் மத்தளை தயிர்உண் டானும் மலர்மிசை மன்னி னானும் நித்தமும் தேடிக் காரை நிமலனே நீஇன் றேகிச் செய்த்தளைக் கயல்பாய் நாங்கூர் சேந்தனை வேந்தனிட்ட சைத்தளை நீக்கி என்முன் காட்டுவெண் காட்டு ளானே. |
| | |
1 | தாயாருக்குத் தகனக்கிரியை செய்யும்போது பாடியவை ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி ? |
| | |
| 2. | முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும் அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன் ? |
| | |
| 3. | வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டுத் தீமூட்டு வேன் ? |
| | |
| 4. | நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்தி பகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ மெய்யிலே தீமூட்டுவேன் ? |
| | |
| 5. | அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானே என அழைத்த வாய்க்கு ? |