2. | திருவொற்றியூர் கண்டம் கரியதாம் கண் மூன்று உடையதாம் அண்டத்தைப் போல் அழகியதாம் - தொண்டர் உடல் உருகத் தித்திக்கும் ஓங்கு புகழ் ஒற்றிக் கடலருகே நிற்கும் கரும்பு. |
| | |
| 3. | ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கு இடு மருந்தை யான் அறிந்து கொண்டேன் - கடு அருந்தும் தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில் போவார் அடியிற் பொடி ! |
| | |
| 4. | வாவிஎல்லாம் தீர்த்த(ம்) மணல் எல்லாம் வெண்ணீறு காவனங்கள் எல்லாம் கணநாதர் - பூவுலகில் ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர் ஓதும் திருவொற்றியூர் ! |
| | |
5. | திருவாரூர் ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநா ளென்(று) ஊரூர்கள் தோறும் உழலுவீர் - நேரே உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர் விளக்கிருக்கத் தீத்தேடு வீர். |
| | |
| 6. | எருவாய்க்கு இருவி ரல்மேல் ஏறுண்டிருக்கும் கருவாய்கோ கண்கலங்கப் பட்டாய் - திருவாரூர்த் தேரோடும் வீதியிலே செத்துக் கிடக்கின்றாய் நீரோடும் தாரைக்கே நீ |
| | |
7. | திருக்காஞ்சி எத்தனை ஊர்? எத்தனை வீ(டு) எத்தனை தாய் ? பெற்றவர்கள் எத்தனை பேர் இட்டழைக்க ஏன் என்றேன் - நித்தம் எனக்குக் கலையாற்றாய் ஏகம்பா கம்பா உனக்குத் திருவிளையாட்டோ? |