| 9. | இப்பிறப்பை நம்பி இருப்பாரோ ? நெஞ்சமே வைப்பிருக்க வாயில் மனை இருக்கச் - சொப்பனம்போல் விக்கிப் பற்கிட்டக் கண் மெத்தப்பஞ் சிட்டு அப்பைக் கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு. |
| | |
| 10. | மேலும் இருக்க விரும்பினையே வெளிவிடையோன் சீலம் அறிந்திலையே சிந்தையே கால்கைக்குக் கொட்டை இட்டு மெத்தை இட்டுக் குத்திமொத்தப் பட்ட உடல் கட்டை இட்டுச் சுட்டுவிடக் கண்டு |
| | |
| 11. | ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே - வன்கழுக்கள் தத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக் கத்திக் குத்தித் தின்னக் கண்டு. |
| | |
| 12. | இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே ? மன்னர் இவர் என்றிருந்து வாழ்ந்தாரை - முன்னம் எரிந்தகட்டை மீதில் இணைக்கோ வணத்தை உரிந்துருட்டிப் போட்டது கண்டு ! |
| | |
| 13. | முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார் ஆசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் கடைச்சங்கம் ஆம்போ ததுஊதும் அம்மட்டோ இம்மட்டோ ? நாம்பூமி வாழ்ந்த நலம். |
| | |
| 14. | எத்தனை நாள்கூடி எடுத்த சரீரம் இவை ? அத்தனையும் மண்திண்ப தல்லவோ ? - வித்தகனார் காலைப் பிடித்து மெள்ளக் கங்குல்பகல் அற்ற இடத்தே மேலைக் குடியிருப்போ மே ! |
| | |
| 15. | எச்சிலென்று சொல்லி இதமகிதம் பேசாதீர் எச்சில் இருக்கும் இடம் அறியீர் - எச்சில்தனை உய்த்திருந்து பார்த்தால் ஒருமை வெளிப்படும் பின் சித்த நிராமயமா மே. |
| | |
| 16. | எத்தனை பேர் நட்டகுழி ? எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ் ? நித்தநித்தம் |