| 21. | புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ? கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ? |
| | |
| 22. | கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ? நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ? |
| | |
| 23. | பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ? வேதனை செய் தானவராய் வீந்தநாள் போதாதோ? |
| | |
| 24. | அன்னை வயிற்றில் அழிந்தநாள் போதாதோ? மன்னவனாய் வாழ்ந்து மரித்தநாள் போதாதோ? |
| | |
| 25. | தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ? சேயாய்ப் புருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ? |
| | |
| 26. | நோய்உண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ? பேய்உண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ? |
| | |
| 27. | ஊனவுடல் கூன்குருடாய் உற்றநாள் போதாதோ? ஈனப் புசிப்பில் இளைத்தநாள் போதாதோ? |
| | |
| 28. | பட்டகளையும் பரதவிப்பும் போதாதோ? கெட்டநாள் கெட்டேன் என்று கேளாதும் போதாதோ? |
| | |
| 29. | நில்லாமைக்கே அழுது நின்றநாள் போதாதோ? எல்லாரும் என்பாரம் எடுத்தநாள் போதாதோ? |
| | |
| 30. | காமன் கணையால் கடைபட்டல் போதாதோ? ஏமன் கரத்தால் இடியுண்டல் போதாதோ? |
| | |
| 31. | நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ? தேன் துளபத்தான் நேமி தேக்குண்டல் போதாதோ? |
| | |
| 32. | உருத்திரனார் சங்காரத்து உற்றநாள் போதாதோ? வருத்தம் அறிந்தையிலை! வாவென்று அழைத்தையிலை! (கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!) |
| | |
| 33. | பிறப்பைத் தவிர்த்தையிலை; பின்னாகக் கொண்டையிலை; இறப்பைத் தவிர்த்தையிலை; என்னென்று கேட்டையிலை |