| | மகளை முன்னிலையாகக் கெண்ட அருள் புலம்பல் குறள் வெண்செந்துறை |
| | |
| 1. | ஐங்கரனைத் தெண்டனிட்டேன் அருளடைய வேண்டுமென்று தங்காமல் வந்து ஒருவன் தன் சொரூபம் காட்டிஎனை |
| | |
| 2. | கொள்ளைப் பிறப்பு அறுக்கக் கொண்டான் குருவடிவம்; கள்ளப் புலன் அறுக்கக் காரணமாய் வந்தாண்டி! |
| | |
| 3. | ஆதாரம் ஓராறும் ஐம்பத்தோர் அட்சரமும் சூதான கோட்டை எல்லாம் சுட்டான் துரிசு அறவே! |
| | |
| 4. | மெத்த விகாரம் விளைக்கும் பலபலவாம் தத்துவங்கள் எல்லாம் தலைகெட்டு வெந்ததடி! |
| | |
| 5. | என்னோடு உடன் பிறந்தார் எல்லாரும் பட்டார்கள்; தன்னம் தனியே தனித்திருக்க மாட்டேண்டி! |
| | |
| 6. | எல்லாரும் பட்டகளம் என்று தொலையுமடி சொல்லி அழுதால் துயரம் எனக்கு ஆறுமடி! |
| | |
| 7. | மண்முதலாம் ஐம்பூதம் மாண்டு விழக் கண்டேண்டி! விண்முதலாம் ஐம்பொறிகள் வெந்துவிழக் கண்டேண்டி! |
| | |
| 8. | நீங்காப் புலன்கள் ஐந்தும் நீறாக வெந்ததடி; வாக்காதி ஐவரையும் மாண்டுவிழக் கண்டேண்டி! |
| | |
| 9. | மனக்கரணம் அத்தனையும் வகைவகையே பட்டழிய இனக்கரணத் தோடே எரிந்துவிழக் கண்டேண்டி! |
| | |
| 10. | ஆத்தும தத்துவங்கள் அடுக்கு அழிய வெந்ததடி! போற்றும் வகை எப்படியோ போதம் இழந்தானை? |
| | |
| 11. | வித்தியா தத்துவங்கள் வெந்துவிழக் கண்டேண்டி சுத்தவித்தை ஐந்தினையும் துரிசு அறவே. |
| | |
| 12. | மூன்று வகைக் கிளையும் முப்பத்து அறுவரையும் கான்றுவிழச் சுட்டுக் கருவேர் அறுத்தாண்டி! |