| 13. | குருவாகி வந்தானோ? குலம் அறுக்க வந்தானோ? உருவாகி வந்தானோ? உரு அழிக்க வந்தானோ |
| | |
| 14. | கேடுவரும் என்றறியேன்; கெடுமதிகண் தோற்றாமல் பாடுவரும் என்றறியேன்; பதியாண்டு இருந்தேண்டி; |
| | |
| 15. | எல்லாரும் பட்டகளம் இன்ன இடம் என்றறியேன்; பொல்லாங்கு, தீர்க்கும் பொறியிலியைக் கண்டேண்டி! |
| | |
| 16. | உட்கோட்டைக் குள்ளிருந்தார் ஒக்க மடிந்தார்கள்; அக்கோட்டைக் குள்ளிருந்தார் அறுபது பேர் பட்டார்கள். |
| | |
| 17. | ஒக்க மடிந்ததடி! ஊடுருவ வெந்ததடி! கற்கோட்டை எல்லாம் கரிக்கோட்டை ஆச்சுதடி! |
| | |
| 18. | தொண்ணூற்று அறுவரையும் சுட்டான் துரிசு அறவே; கண்ணேறு பட்டதடி கருவேர் அறுத்தாண்டி! |
| | |
| 19. | ஓங்காரம் கெட்டதடி! உள்ளதெல்லாம் போச்சுதடி! ஆங்காரம் கெட்டதடி! அடியோடு அறுத்தாண்டி! |
| | |
| 20. | தரையாம் குடிலை முதல் தட்டுருவ வெந்ததடி! இரையும் மனத்து இடும்பை எல்லாம் அறுத்தாண்டி! |
| | |
| 21. | முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி! தன்னை அறியவே தான் ஒருத்தி யானேண்டி! |
| | |
| 22. | என்னையே நான் அறிய இருவினையும் ஈடழித்துத் தன்னை அறியத் தலம் எனக்குச் சொன்னாண்டி! |
| | |
| 23. | தன்னை அறிந்தேண்டி! தனக்குமரி ஆனேண்டி! தன்னம் தனியே தனி இருக்கும் பக்குவமோ? |
| | |
| 24. | வீட்டில் ஒருவரில்லை வெட்ட வெளி ஆனேண்டி! காட்டுக்கு எரித்த நிலா கனவாச்சே கண்டதெல்லாம் |
| | |
| 25. | நகையாரோ கண்டவர்கள்? நாட்டுக்குப் பாட்டலவோ? பகையாரோ கண்டவர்கள்? பார்த்தாருக்கு ஏச்சலவோ? |
| | |
| 26. | இந்நிலைமை கண்டாண்டி! எங்கும் இருந்தாண்டி! கன்னி அழித்தாண்டி! கற்பைக் குலைத்தாண்டி. |