பக்கம் எண் :

16சித்தர் பாடல்கள்

     காதில்வாளி காரைக்கம்பி பாடகம்பொ னொன்றலோ
     சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே” (47)

என்று  சாதி  பேதம்  பார்க்கின்றவர்களைப்  பார்த்துக் கேட்கின்றார். அது
மட்டுமல்ல,  மணமுடிக்க  மணப்  பெண்ணை  குணம் பார்த்துதான் தேர்வு
செய்ய  வேண்டுமே  தவிர  குலம்  பார்த்தல்ல  என்று இளைஞர்களையும்
கேட்டுக் கொள்கிறார்.

     பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
     இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்கிதோ
     பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
     பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாடு மும்முளே” (40)

     கீழ்  குலத்தைச்  சேர்ந்த   பறைச்சியும்  மேல்  குலத்தைச்  சேர்ந்த
பார்ப்பனத்தியும் போகம் செய்யும்போது ஒரே சுகத்தைத்தான் அளிக்கிறார்கள்.
இதில்  பறைச்சி என்ன? பாப்பாத்தி என்ன? இரண்டும் ஒன்றுதான். ஆகவே
சாதிபேதம் பார்க்காமல் இல்லறத்திற்கேற்ற பெண்ணை என்று தேர்வு செய்து
மணம்   முடிப்பதே   பெருமைக்குரியது   என்று  கூறியதுமல்லாது  தாமே
இல்லறத்திற்கேற்ற குலப்பெண் ஒருத்தியை மணந்து வாழ்ந்து காட்டினார்.

     சிவவாக்கியரின் புரட்சிக் கருத்துக்கள் ஜாதி மதத்தில் காணப்படுவதற்கு
இன்னுமொரு  சான்றாக,  இவர்  சைவராயிருந்தும்   வைணவக்  கடவுளான
ராமரையும்  தம்  பாடல்களிலே  புகழ்ந்து பாடியதுதுடன்  இராம நாமத்தின்
பெருமையையும் பாங்குற எடுத்தியம்புகிறார்.

     ராம! ராம!  என்று  செபித்துக் கொண்டிருந்தால் போதும்; வேறு எந்த
பூசையோ,  சந்தி,  ஜெப,  தபங்களோ  செய்ய  வேண்டியதில்லை.  எல்லா
நன்மைகளும், கிடைக்க