சிவாய மென்ற அட்சரம் சிவனிருக்கு மட்சரம் உபாய மென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம் கபாடமுற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை உபாயம் இட்டு அழைக்குமே சிவாயம் அஞ்சு எழுத்துமே என்றும், அஞ்கோடி மந்திர முஞ்சுளே யடக்கினால் நெஞ்சுகூற வும்முளே நினைப்பதோ ரெழுத்துளே அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால் அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே என்று ஐந்து கோடி மந்திரங்களும் ‘சிவாய நம’ எனும் ஐந்து எழுத்தில் அடங்கி நன்மையளிக்கும் பெருமையைக் கூறுகின்றார். திருமூலரின் சில கருத்துக்களையும் சிவவாக்கியர் தம் பாடலில் எடுத்துரைக்கின்றார். ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்ற திருமூலர் கருத்தினை, ‘கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால் காயமான பள்ளியில் காணலாம் இறையையே” என்ற சிவவாக்கியர் பாடலில் காணலாம். இறைவனை கோயில், பள்ளி இங்கெல்லாம் தேடி அலைய வேண்டிய தில்லை. நமது உள்ளமே இறைவன் உறையும் கோயில் இந்த உடம்பே அவன் ஆட்சி செய்யும் ஆலயம் என்று கூறுகின்றார் சிவவாக்கியர். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் என்ற திருவள்ளுவரின் கருத்தையும் |