பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்19


    “மனத்து அடுத்து அழுக்கு ஆறாத மவுனஞான யோகிகள்”

என்ற தம் பாடலில் புலப்படுத்துகின்றார்.

     ஒருவர் பலரிடத்தும்  பேசாமலிருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம்,
ஞானியாகவும்   இருக்கலாம்,   யோகம்  செய்து  கொண்டும்   இருக்கலாம்,
நாட்டைத்  துறந்து  காட்டிலே போய்க்கூட வாழலாம்.  ஆனால் உள்ளத்தில்
தூய்மை யில்லாதவராய் இருந்தால் அதனால் எந்த பலன்களும் மேற்சொன்ன
விரதங்கள்  யாவும்  பாழாய்  முடியும்.  உள்ளத்திலே குற்றங்களை வைத்துக்
கொண்டு இருப்பவர்கள் உண்மையான கடவுளைக் காணமாட்டார்கள்.

     அப்படியானால்  உண்மையான  கடவுள்தான்  யார்? என்ற வினாவுக்கு
அறிவுதான்  இறைவன்  என்று  விளக்கம் தருகின்றார் சிவவாக்கியர். அறிவு
தான்  இறைவன் என்றால்  அறிவாளிகள் மட்டும்தான்  இறைவனைத் தொழ
இயலுமோ?  என்ற  வினாவும்  எழுகிறது.  இல்லை  பாமர  மக்களும்  தம்
அன்பினால்  இறைவனைத்  தரிசிக்கலாம்   என்றும்   இறைவன்   எங்கும்
நிறைந்திருக்கிறான்  என்ற  கருத்தையும்   சிவவாக்கியர்  தம்  பாடல்களில்
நிறைத்துக் காட்டுகின்றார்.

காப்பு

     அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
     கரியதோர் எழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
     தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     1

     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
     கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து உதிக்கவே