பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே. | 2 |
| |
அக்ஷர நிலை ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே. | 3 |
| |
சரியை விலக்கல் ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே. | 4 |
| |
யோக நிலை உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லிரேல் விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும் அருள் தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே. | 5 |
| |
தேக நிலை வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால் விடுவனோ அவனை முன்னர் வெட்டவேணும் என்பனே நடுவன்வந்து அழைத்தபோது நாறுமிந்த நல்லுடல் சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டி கைக் கொடுப்பரே. | 6 |
| |
ஞான நிலை என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்ததில்லையே என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்தஒன்றை யாவர் காண வல்லரோ என்னிலே இருந்திருந்து யான்உ ணர்ந்து கொண்டெனே. | 7 |