பக்கம் எண் :

216சித்தர் பாடல்கள்

              கட்டளைக் கலித்துறை

மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான்பொருளும்
வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும்
காடுங் கரைகளுங் கல்லாம் பணியும் கரிபரியும்,
தேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே.
23
  
              நேரிசை வெண்பா

போகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புன்மைபோம்,
மோகம்போம் மூர்க்கம்போம் மோசம்போம் - நரகம்போம்,
வேதமுத லாகமங்கண் மேலான தென்றுபல்கால்,
ஓதுபிர மத்துற்றக் கால்.
24
  
              தாண்டவராயக்கோன் கூற்று

    தாந்தி மித்திமி தந்தக்கோ னாரே
    தீந்தி மித்திமி திந்தக்கோ னாரே
    ஆனந்தக் கோனாரே - அருள்
    ஆனந்தக் கோனாரே.
 
  
ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன்
     அந்தவட் டத்துள்ளே நின்றதுங் கண்டேன்
மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்
     மந்த மனத்துறுஞ் சந்தேகந் தீர்த்தேன்.           (தாந்)
25
  
அந்தக் கரணமெனச் சொன்னா லாட்டையும்
     அஞ்ஞான மென்னு மடர்ந்தவன் காட்டையும்
சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன்
     சாவா திருந்திடக் கோட்டையுங் கட்டினேன்.       (தாந்)
26
  
மெய்வாய்கண் மூக்குச் செவியென மைந்தாட்டை
     வீறுஞ் சுவையொளி யூறோசை யாங்காட்டை
எய்யாம லோட்டினேன் வாட்டினே னாட்டினேன்
     ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே.        (தாந்)
27
  
பற்றிரண் டும்மறப் பண்புற்றேன் நன்புற்றேன்
     பாலையு முட்கொண்டேன் மேலையாங் கட்கொண்டேன்