பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்217


சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்
     சிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன். (தாந்)
28
  
அண்ணாக்கை யூடே யடைத்தே யமுதுண்ணேன்
     அந்தரத் தரத்தை யப்பொழு தேயெண்ணேன்
விண்ணாளும் மொழியை மேவிப்பூ சைபண்ணேன்
     மெய்ஞ்ஞானம் ஒன்றன்றி வேறேயொன்றை நண்ணேன்.
                                               (தாந்)
29
  
மண்ணாதி பூதங்க ளைந்தையுங் கண்டேனே
     மாய விகாரங்கள் யாவையும் விண்டேனே
விண்ணாளி மொழியை மெய்யினுட் கொண்டேனே
     மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே.       (தாந்)
30
  
வாக்காதி யைந்தையும் வாகாய்த் தெரிந்தேனே
     மாயைசம் பந்தங்க ளைந்தும் பிரிந்தேனே
நோக்கரும் யோகங்க ளைந்தும் புரிந்தேனே
     நுவலும்மற் றைந்தியோக நோக்கம் பரிந்தேனே.    (தாந்)
31
  
ஆறா தாரத்தெய் வங்களை நாடு
     அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு
கூறான வட்டவா னந்தத்திற் கூடு
     கோசமைந் துங்கண்டு குன்றேறி யாடு.            (தாந்)
32
  
                நாராயணக்கோன் கூறுதல் 

ஆதி பகவனையே                             பசுவே
     அன்பாய் நினைப்பாயேல்
சோதி பரகதிதான்                              பசுவே
    சொந்தம தாகாதோ.
33
  
எங்கும் நிறைப்பொருளைப்                       பசுவே
    எண்ணிப் பணிவாயேல்
தங்கும் பரகதியில்                              பசுவே
    சந்ததஞ் சாருவையே.
34
  
அல்லும் பகலும் நிதம்                           பசுவே
   ஆதி பதந்தேடில்