புல்லு மோட்சநிலை பசுவே பூரணங் காண்பாயே. | 35 |
| | |
ஒன்றைப் பிடித்தோர்க்கே பசுவே உண்மை வசப்படுமே நின்ற நிலைதனிலே பசுவே நேர்மை யறிவாயே. | 36 |
| | |
எல்லா மிருந்தாலும் பசுவே ஈசர் அருளிலையேல் இல்லாத் தன்மையென்றே பசுவே எண்ணிப் பணிவாயே. | 37 |
| | |
தேவனு தவியின்றிப் பசுவே தேர்ந்திடில் வேறொன்றில்லை ஆவிக்கு மாவியதாம் பசுவே அத்தன் திருவடியே. | 38 |
| | |
தாயினும் அன்பனன்றோ பசுவே சத்திக்குள் ளானவன்தான் நேயம் உடையவர்பால் பசுவே நீங்கா திருப்பானே. | 39 |
| | |
முத்திக்கு வித்தானோன் பசுவே மூலப் பொருளானோன் சத்திக் குறவானோன் பசுவே தன்னைத் துதிப்பாயே. | 40 |
| | |
ஐயன் திருப்பாதம் பசுவே அன்புற்றுநீ பணிந்தால் வெய்ய வினைகளெல்லாம் பசுவே விட்டொடுங் கண்டாயே. | 41 |
| | |
சந்திர சேகரன்றாள் பசுவே தாழ்ந்து பணிவாயேல் இந்திரன் மான்முதலோர் பசுவே ஏவல் புரிவாரே. | 42 |