தூய மறைப்பொருளைச் சுகவா ரிதியமிர்தை நேய முடனாளு நிலைபெறவே போற்றீரே. | 52 |
| | |
சராசரத் தைத்தந்த தனிவான மூலமென்னும் பராபரத் தைப்பற்றிப் பவமறவே போற்றீரே. | 53 |
| | |
மண் ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக் கண்ணாரக் காணக் கருத்திசைந்து போற்றீரே. | 54 |
| | |
பொய்ப்பொருளை விட்டுப் புலமறிய வொண்ணாத மெய்ப்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே. | 55 |
| | |
எள்ளிற்றை லம்போல எங்கும் நிறைபொருளை உள்ளிற் றுதித்தே யுணர்வடைந்து போற்றீரே. | 56 |
| | |
நெஞ்சொடு கிளத்தல் பூமியெல்லா மோர்குடைக்கீழ் பொருந்தவர சாளுதற்குக் காமியம்வைத் தாலுனக்குக் கதியுளதோ கன்மனமே. | 57 |
| | |
பெண்ணாசை யைக்கொண்டு பேணித் திரிந்தக்கால் விண்ணாசை வைக்க விதியிலையே கன்மனமே. | 58 |
| | |
மேயும் பொறிகடமை மேலிடவொட் டார்க்குவினை தேயுமென்றே நல்வழியிற் செல்லுநீ கன்மனமே. | 59 |
| | |
பொன்னிச்சை கொண்டு பூமிமுற் றுந்திரிந்தால் மன்னிச்சை நோக்கும் வாய்க்குமோ கன்மனமே. | 60 |
| | |
பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கங் கொள்ளாமல், மெய்யான ஞானக்கல்வி விரும்புவாய் கன்மனமே. | 61 |
| | |
பேய்க்குரங்கு போலப் பேருலகி லிச்சைவைத்து, நாய்நரிகள் போலலைந்தேன் நன்மையுண்டோ கன்மனமே. | 62 |
| | |
இரும்பையிழுக் குங்காந்தத் தியற்கைபோற் பலபொருளை, விரும்பினதால் அவைநிலையோ விளம்புவாய் கன்மனமே. | 63 |
| | |
கற்பநிலை யால்லவோ கற்பகா லங்கடத்தல் சொற்பநிலை மற்றநிலை சூட்சங்காண கன்மனமே. | 64 |