ஞான நிலை தங்கம்ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல் செங்கண் மாலும் ஈசனும் சிறந்திருந்தது எம்முளே விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே எங்குமாகி நின்றநாமம் நாமம்இந்த நாமமே. | 22 |
| |
யோக நிலை அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஓரெழுத்து அறிந்த கூறவல்லிரேல் அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. | 23 |
| |
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியான அஞ்சுமே பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர் நெஞ்சில்அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல் அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியானது ஒன்றுமே. | 24 |
| |
நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர் வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே காலன்ஓலை வந்தபோது கையகன்று நிற்பிரே ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே. | 25 |
| |
கிரியை நிலை வீடெடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யு மாய் மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள் நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில் ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாண் இவ்வுடலமே. | 26 |
| |
யோக நிலை ஓடமுள்ள போதெலாம் ஓடியே உலாவலாம் ஓடமுள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம் ஓடம் உடைந்தபோது ஒப்பிலாத வெளியிலே ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லை யானதே. | 27 |