சரியை நிலை மாறுபட்ட மணிதுலக்கி வண்டின்எச்சில் கொண்டு போய் ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும் கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே. | 34 |
| |
யோக நிலை கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே. | 35 |
| |
செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும் செம்பிலும் தராவிலுஞ் சிவனிருப்பன் என்கிறீர் உம்மதம் அறிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின் அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே. | 36 |
| |
கிரியை நிலை பூசை பூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம் ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே. | 37 |
| |
ஞான நிலை இருக்கநாலு வேதமும் எழுத்தைஅற வோதிலும் பெருக்கநீறு பூசினும் பிதற்றிலும் பிரானிரான் உருக்கிநெஞ்சை உட்கலந்து உண்மைகூற வல்லிரேல் சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமே. | 38 |
| |
யோக நிலை கலத்தில்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால் கலத்திலே கரந்ததோ கடுத்ததீக் குடித்ததோ | |