ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும் உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்; பருவமதிற் சேறுபயிர் செய்ய வேணும் பாழிலே மனத்தை விடான் பரம ஞானி; திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி தேசத்திற் கள்ளரப்பா கோடா கோடி; வருவார்க ளப்பனே அனேகங் கோடி வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே. | 4 |
| |
தானென்ற தானேதா னொன்றே தெய்வம் தகப்பனுந் தாயுமங்கே புணரும்போது நானென்று கருப்பிடித்துக் கொண்டு வந்த நாதனைநீ எந்நாளும் வணங்கி நில்லு; கோனென்ற திருடனுக்குந் தெரியு மப்பா கோடானு கோடியிலே யொருவ னுண்டு, ஏனென்றே மனத்தாலே யறிய வேணும் என்மக்காள் நிலைநிற்க மோட்சந் தானே. | 5 |
| |
மோட்சமது பெறுவதற்குச் சூட்சங் கேளு முன்செய்த பேர்களுடன் குறியைக் கேளு! ஏய்ச்சலது குருக்களது குலங்கள்கேளு எல்லாருங் கூடழிந்த தெங்கே கேளு; பேச்சலது மாய்கையப்பா வொன்று மில்லை பிதற்றுவா ரவரவரும் நிலையுங்காணார்; கூச்சலது பாளையந்தான் போகும் போது கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத் தானே. | 6 |
| |
மூச்சொடுங்கிப் போனவிடம் ஆருங் காணார் மோட்சத்தின் நரகாதி யிருப்புங் காணார்; வாச்சென்றே வந்தவழி யேற்றங் காணார் வளிமாறி நிற்குமணி வழியுங் காணார்; வீச்சப்பா வெட்டவெளி நன்றாய்ப் பாரு வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே; ஆச்சப்பா கருவுதனில் அமைந்தாற் போலாம் அவனுக்கே தெரியுமல்லா லறிவாய்ப் பாரே; | 7 |