13. உரோம ரிஷி ஞானம் அஷ்டமாசித்தி பெற்ற பதினெண் சித்தர்களுள் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடர் என்றும் குமாரர் என்றும் கூறுவர். உரோம ரிஷிக்கு உடல் முழுவதும் மயிர் முளைத்திருந்தபடியால் ‘உரோம முனி’ என்று காரணப் பெயர் பெற்றார். ஒரு பிரம்மா இறந்தால் இவரது மயிர் ஒன்று உதிரும். இவ்வாறு மூன்றரைக் கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவரது வாழ்நாள் முடிவுக்கு வரும். உரோம முனி இறந்தால் அஷ்டகோண முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்பர். காலாங்கியும் போகரும் சீனாவிலிருந்து தமிழகம் வந்து சித்தர்களானது போல ரோம ரிஷியும் ரோம புரியிலிருந்து வந்த சித்தராயிருக்கலாம். உரோம ரிஷி என்ற பெயர் ரோமாபுரியுடன் தொடர்புடையது என்பர் சிலர். இவர் அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயத்திற்கும் சிலேடைகளுக்கும் பஞ்சமே இல்லை, எண்சீர் விருத்தம் மூலவட்ட மானகுரு பாதங் காப்பு; முத்திக்கு வித்தான முதலே காப்பு; மேலவட்ட மானபரப் பிரமங் காப்பு! வேதாந்தங் கடந்துநின்ற மெய்யே காப்பு; |