பக்கம் எண் :

382சித்தர் பாடல்கள்

கூரையா அங்குலந்தா னாலுஞ் சென்றால்
     குறிக்குள்ளே தானடக்கிக் கொண்ட தையா!
ஆரையா உனக்கீடு சொல்லப் போறேன்
     அருமையுள்ள என்மகனென் றழைக்க லாமே.
5
  
அழைப்பதுவும் நல்லபிள்ளை யானால் நன்றே!
     ஆகாத சீடர்களைச் சேர்த்தல் தோடம்;
பிழைப்பதற்கு வழிசொன்னால் பார்க்க மாட்டான்
     பெண்டாட்டி மனங் குளிரப் பேசு மாடு;
உழைப்பதற்குச் செனனமெடுத் தானே யல்லால்
     உதவிதனக் கெவ்வளவு முண்டோ வில்லை;
இளப்பமிவன் பேச்சையடிக் கடிதா னாகு
     மேதுக்குச் சொல்லுகிறோ மினிமேல் தானே.
6
  
மேலென்ன இருக்கையிலும் நடக்கும் போதும்
     வேறுரையால் சாரங்கள் விடாம லேற்று
நாலென்ன எட்டென்ன வெல்லா மொன்று
     நலமான அட்டாங்க மப்பிய சித்துக்
காலென்னப் பிராணாய முன்னே செய்யில்
     கணக்காகப் பூரகங்கும் பகமே நாலு
கோலென்ன ரேசகந்தா னொன்று மூன்று
     குறையாமற் சரபீங் கூட்டித் தீரே.
7
  
கூட்டியே பழகினபின் சரபீ சத்தில்
     குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம்
காட்டுவிக்கு மல்லால்விழிக் குறியி னாலே
     கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரு;
மூட்டுவிக்கு மாதார மாறுந் தானே
     மூலவட்டக் கணபதிநான் முகத் தோன் மாயன்
தாட்டிகமா மணிப்பூரங் கையன் வட்டந்
     தணலான ருத்திரனுந் தணலு மாமே.
8
  
தணலாகும் விசுத்தியறு கோண வட்டஞ்
     சதாசிவனார் வட்டமல்லோ குருபீ டந்தான்;
மனையான பதினியிலே குறித்துப் பார்க்க
     மத்யமுதல் கரிகொண்டு தூங்குந் தூங்கும்