கனலேறிக் கொண்டிருந்தா லெல்லா முண்டு; காற்றைவெளி விட்டக்கால் கருமந் தீதான் புனலூறும் வழிப்பாதை யிந்த மார்க்கம் பொல்லாத துரோகிக்குப் பொய்யா மன்றே? | 9 |
| |
செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா! சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்; வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு; மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு; சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு; பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே. | 10 |
| |
மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து வீடேதிங் குடலேது யோக மேது வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்? காடேறி மலையேறி நதிக ளாடிக் காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால் சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே. | 11 |
| |
சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால் சுடர்போலக் காணுமடா தூல தேகம்; அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம் அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான் பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின் பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால் வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே. | 12 |
| |
ஓமென்ற கெட்டபுத்தி மாணா கேளே; உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே; ஆமென்ற இருபத்தோ ராயி ரத்தோ டறுநூறு சுவாசமல்லோ ஒருநா ளைக்குப் | |