பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்385


14. திருமூல நாயனார் ஞானம்

     இவர் கயிலாய பரம்பரையைச் சேர்ந்தவர்.

     சித்தர்களில்  முதலாமவரும்  முதன்மையானவருமான சிவபிரானிடமும்
நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர்.

    பதஞ்சலி, வியாக்கிரம பாதரோடு சிதம்பரம் கனக சபையில் இறைவனின்
திருநடனம் கண்டு களித்தவர் என திருமந்திரம் கூறுகிறது.

     வான்வழி வரும் போது மூலன் எனும் இடையன் இறந்து கிடப்பதையும்
அவனது உடலைச் சுற்றிச் சுழன்று பசுக்கள் கதறி வருந்துவதையும் கண்டவர்.
அருளாளராகிய  அவரது  உள்ளத்தில்  பசுக்களின்  துன்பத்தைப்  போக்க
வேண்டும்  என்ற  எண்ணம்  தோன்றியது.   உடனே  மூலனின்  உடலில்
கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார்.

    ஆனால் மூலனின் மனைவியுடன் வாழ விரும்பாது தம் பழைய உடலைத்
தேட  அவ்வுடலைக்  காணாது  திகைத்து  முடிவில்  உடலிலேயே  இருந்து
அற்புதங்கள் பல புரிந்தார்.

     இவர்  8000  திருமந்திரங்கள்   இயற்றியதாக  அகத்தியர்  கூறுகிறார்.
ஆனால் இப்போது 3000 திருமந்திரங்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன.

     இது தவிர  வைத்தியம்,  வாதம் , யோகம், ஞானம் என்னும் துறைகள்
பற்றியும் பாடியுள்ளார்.