தெளிவரிய பாதமது அகார மாகிச் சிற்பரமுந் தற்பரமுந் தானே யாகி அழிவரிய சோதியது தானே யாகி அடிமுடிவு முடியாகி யமர்ந்து நின்று மொழிவரிய முதலாகி மூல மாகி முச்சுடருந் தானாகி முடிந்த சோதி சுழியினிலே முனையாகிக் கோப மாகிச் சொல்லரிய வெழுத்தென்றே தொகுத்துப் பாரீர். | 9 |
| |
தொகுப்பதும் தாம் மந்திரங்கள் கருவி நூல்கள் சொல்லரிய தத்துவங்கள் தம்மை யெல்லாம் வகுத்துடனே யிவற்றையெலாங் கண்டு நீங்கி வாகான உடலுயிரை வகையாற் கண்டு பகுப்புடனே சேராமற் பாதந் தன்னைப் பரகதிக்கு வழியனெவே பற்றிக் கொண்டு விகற்பமிலா மூலமதில் நின்ற சோதி மேலான பாதமென்றே மேவி நில்லே. | 10 |
| |
மேவியதோர் சற்குருவின் பாதந் தன்னை மெய்ஞ்ஞான மென்றதனை மேவிக் கொண்டு ஆவியுடல் காயமெல்லா மறிந்து பார்த்தே அத்தனார் வடிவமென்றே அறிந்துகொண்டு பாவனையு வானவெல்லாம் விட்டு நீங்கிப் பகலிரவு மற்றிடத்தே கருத்தை வைத்துச் சீவனையுஞ் சிவந்தனையும் ஒன்றாய்த் தானே திருமூலர் பாதமொன்றித் திடமாய்க் காணே. | 11 |