காப்பு எண்சீர் விருத்தம் அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி அகண்டபரி பூரணத்தின் அருளே போற்றி மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி குண்டலிக்குள் அமர்ந்துநின்ற குகனே போற்றி குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி |