வாசியதுக் கருகாகுங் கண்டு கொள்ளும் மக்களே சின்முகத்தில் நடுப்பா லாமோ. | 82 |
| | |
நடுவென்ன வெட்டவெளி யொன்று மில்லை நானுமில்லை நீயுமில்லை மகண்ட வீதி கடுவென்ன லகுவென்ன மனஞ் செவ் வானால் கண்டுகொள்ளு மென்றுசொல்லிக் கரத்திற் காட்டிச் சுடுவென்ன தாபமென்ற முளையை முந்திச் சுடுகின்ற துத்தியென்ன மௌனத் தீதான் விடுவென்ன இந்திரியப் பாம்பை நீயும் விட்டகன்றே யறிவோடோ மேவு மேவே. | 83 |
| | |
மேவுமென்கை லாயபரம் பரையா மாணா வெகுகோடி ரிஷிகளுக்கு முபதே சித்தார் மேவுமென்று சித்தரிலே யனேகங் கோடி மேருவிலே யிருந்தார்க்கு முபதே சித்தார் மேவுமென்றேன் னோடுபதி னாறு பேர்க்கு விளங்கியவர் பதம்பிடிக்க வுபதே சித்தார் மேவுமென்றே யெழுவருடன் திருமூ லர்க்கு விளம்பினார் மெய்ஞ்ஞானம் விளம்பி னாரே. | 84 |
| | |
விளம்பியநா மெல்லாங்கை லாய வர்க்கம் மேருவிலே யெடுத்தவுட லெமக்கு மக்காள் அளம்பினதோர் சனகாதி யையர் விட்டே அரைக்கணமும் பிரியார்க ளடியை விட்டுத் தளம்பினதோர் கொடிக்குக்கொழு கொம்பு போலே சதாநித்தங் காத்திருந்தோ மையா கிட்டக் கிளம்பினதோர் பந்துபோ லனேகம் பிள்ளை கெடியிட்டு மாட்டியங்கே கிட்டி னாரே. | 85 |
| | |
கிட்டினங்கை லாயபரம் பரையி னாலே கேளுமாச் சரியங்கொங் கணர்தாம் சென்று கிட்டினோ மென்று சொல்லி யீசா னத்தே கெடியான ரசமுண்டு சட்டை போக்கிக் கிட்டினோ மீசானந் துதித்தோ மென்று கெடியாகத் தவசிருந்து முத்த ராகிக் | |