கிட்டினோ மென்றுசொல்லித் தட்சிணா மூர்த்தி கெடியான பதம்பிடித்துப் பணித்திட் டாரே. | 86 |
| | |
பணிந்திட்ட கொங்கணரைப் பார்த்து நாதன் பாருலகிற் பிறந்தவனிப் படிதா னானால் பணிந்திட்ட சடம்போக்கிக் கைலாயத் தேக மானதுதான் வெகுகடின மதிக மெத்தக் கனிந்திட்ட கனிவாலே வீரத் தாலே கலங்காமற் சமாதியுற்றுக் கயிலா யத்திற் றணிந்திட்ட புத்திகொண் டிங்கே வந்தாய் சாதகமா யொருவரையுங் கண்டி லேனே. | 87 |
| | |
கண்டிலே னாச்சரியங் குமார னேபார் கலந்தநற் சென்மமிவர் கைலாய மானார் ஒண்டிலே நாலதுக்கு மகத்வ மென்ன உற்றசிவ விந்துவிலப் படிதா னாச்சு; கண்டிலே னிவரைப்போற் சித்தர் காணேன் காரணமா யிவனுக்குத் தீட்சிப் பேனான் பண்டிலேன் கொங்கணரே மயங்க வேண்டா பரம்பரமாய் வயதுதந்த மௌனந் தானே | 88 |
| | |
மௌனவித்தை மூலருக்கு முன்னே சொன்னேன் மருவியவர் காலாங்கிக் கதுவே சொன்னார் மௌனவித்தை யகண்டாதி யறிந்து கொள்ளும் மகத்தான போகருந்தா னுமக்குச் சொன்னார் மற்றொன்று மயக்கமற்று மௌனத் தார்க்கு மௌனவித்தை யெய்திக்கா லவனே ஞானி பற்றொன்றும் வையாதே பலருங் காண வாய்திறந்து பேசாதே மகாரம் நன்றே. | 89 |
| | |
நன்றான மௌனத்திற் கடிகை சேர நல்வினையுந் தீவினையும் நாச மாகும் நன்றான மௌனமென்று நினைக்க முத்தி நல்லோர்கள் நினைப்பார்கள் மற்றோர் காணார். நன்றான மௌனமல்லோ ரிஷிகள் சித்தர் நாலுதிக்குஞ் சொருபமல்லோ ஞானி யானார் | |