பக்கம் எண் :

452சித்தர் பாடல்கள்

     வர  ரிஷியின்  சாபத்தால்  உலகத்தில்  சந்திர  குலம்  விளங்க ஒரு
வெள்ளாட்டின்  (விதவை)  வயிற்றில்  பிறந்தவர்  இவர்  என்றும்,  பிரளய
காலத்தில்  காக்கை  வடிவெடுத்து  அப்பிரளயத்திலிருந்து தப்பிப் பிழைத்து
அநேக  கோடி  வருடங்கள்   ஜீவித்து   இருந்தாரென்றும்  ஒரு  வரலாறு
தெரிவிக்கின்றது.

     காகபுசுண்டர்    அன்னத்தின்     முட்டையிலிருந்து    பிறந்தவரா?
வெள்ளாட்டின்  பிள்ளையாகப்  பிறந்தவரா?  என்னும் ‘ரிஷிமூலம்’ இன்னும்
உறுதிப்படுத்த முடியாத தேவரகசியம்.

    இவர் தமிழ் நாட்டில் பிறந்தவர். இவர் உருவம் கருமையாக இருக்கலாம்;
எதையும் கூர்ந்து பார்த்து உண்மை காணும் தன்மையுள்ளவராய் இருக்கலாம்.
உண்மைகளைக்  காணப்   பலவிடங்களிலும்  அலைந்து  திரிந்தவராயிருந்த
மையால்  இவர்  காகபுசுண்டர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சாமி
சிதம்பரனார் கூறுகின்றார்.

    இவர் காக்கை வடிவில் இருந்து பல இடங்களிலும் சுற்றித் திரிந்தமைக்கு
இவர் பாடல்களிலேயே ஆதாரம் உள்ளது.

“காகம் என்ற ரூபமாய் இருந்து கொண்டு
     காரணங்கள் அத்தனையுமே கருவாய்ப் பார்த்து
வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க
     வெகுதூரம் சுற்றிஇன்னும் விபரம் காணேன்”

என்ற வரிகளால் இஃது உறுதிப்படுகின்றது.

     தன்னுள்ளே  இறைவன்  கோயில்  கொண்டுள்ளதை யறியாமல் வீணே
இந்த  மனிதர்களெல்லாம்   வெளியில்  பல  தெய்வங்கள்  உண்டு  என்று
அலைந்து திரிகின்றனரே என்பதை,