பக்கம் எண் :

454சித்தர் பாடல்கள்

காமப்பேய் கொண்டவனோ டிணங்கிடாதே
     காரணத்தைக் கண்டு விளையாட்டு வாயே”

“விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு
     வேகாத தலையாகும் விரும்பிப்பாரு
மலையாமல் வொண்சாரை பிடித்தே யுண்ணு
     மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்
அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே
     அக்கினியாம் கம்பமடா சுழுமுனை யாச்சுக்
கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு
     கபடமற்ற தேகமடா கண்டு பாரே” (28)

     இது  மனம்  காமவயப்படாமல்  வாசியோகம் மூலம் குண்டலி எழுப்பி
நித்திய தேகம் பெறும் முறையை உபதேசித்தது ஆகும்.

     இவர்  கூறும்  இந்த அக்கினி கம்பம் சுழுமுனை நாடியாகும். இதனை,

“நேரப்பா நெடுந்தூரம் போகும்போது
     நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்;
வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும்
     வெளியொன்றுந் தெரியாம லிருக்குந்தானே”

என்று  சுழுமுனைக்கு  விளக்கம் தருகின்றார். இந்த சுழுமுனையின் முடிவில்
மனோன்மணி வீற்றிருக்கும் நிலையை,

“இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
     என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்” (44)

என்று கூறுகின்றார்.

     வாசியோகமே காயசித்தி உபாயமென்பதை,

“சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா
     சத்தியமா யண்டத்திற் செல்லும் போது