பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்455


போற்றுகிற அக்கினியும் பிரவேசித்துப்
     புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்
மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம்
     மைந்தனே அபுரூப மாகுமப்பா
வாற்றியே நிழற் சாய்கை யற்றுப் போகும்
     வலுத்ததடா காயசித்தி யாச்சப் பாரே” (55)

     இவர்  உலகில்  நிலவும்  சாதி  வேற்றுமையைத்  தம்  பாடல்களில்
வெகுவாகக்    கண்டித்துள்ளார்.    குருவைத்   தேர்ந்தெடுப்பதில்   மிக
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று  கூறும் இவர் போலி குருவானவர்
உண்மையான பிரமத்தை அறியாதவர்கள்  என்றும், அவர்கள் வெறும் வேத
ரகசியங்களை அறிந்ததினால் மட்டும் மெய்ஞானியராக மாட்டார்கள் என்றும்,
வெறும் காவியுடையும் யோக தண்டம் என்னும் முககோல் காலில் பாத குறடு
இவைகள்  மட்டும்  ஒருவரைக் குருவாக உருவகப்படுத்த இயலாது. இவர்கள்
எல்லாம்  ஆணவம்  கொண்ட பிறர் அஞ்சத்தக்க வேடதாரிகள் என்று கூறி,
இத்தகைய  குருமார்கள்   பணம்   பறிப்பதிலேயே  குறியாக  இருப்பார்கள்
என்பார் காகபுசுண்டர்.

“குறியென்ற உலகத்தில் குருக்கள் தானும்
     கொடிய மறை வேதம் எலாம் கூர்ந்துபார்த்து
அறியாமல் பிரமத்தைப் பாராமல்தான்
     அகந்தையாய்ப் பெரியோரை அழும்புபேசி
விரிவான வேடம் இட்டுக் காவிபூண்டு
     வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே;
பரியாச மாகவும் தான் தண்டும் ஏந்திப்
     பார்தனிலே குறடு இட்டு நடப்பான் பாரே”

“பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
 பணம்பறிக்க உபதேசம் பகர்வோம் என்பார்”