பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்457


     அகங்காரம்  காரணமாக  இதை  மறந்து  இதைக்  கண்டறிவதற்கான
சாதனத்தையும்  நீ  மறந்து  விடுவாயானால்  உனக்கு  அபரோட்ச ஞானம்
கிட்டாது.  பரமாத்மாவுடன்   ஒன்று  மட்டும்  முக்தி  நிலையும்  உனக்குக்
கிட்டாது என்கிறார் காகபுசுண்டர்.

“வேணும் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும்
     வித்தனிடம் அடங்கி நின்ற விருட்சம் போலும்
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும்
     கன்று ஆவின் பாலிலே நெய்யைப் போலும்
தோணுமயில் முட்டையின் மேல் வர்ணம் போலும்
     தூலம் அதி சூட்சுமம்தான் துலங்கி நிற்கும்
ஆணவத்தால் சாதனத்தை மறந்தாயானால்
     அபரோட்ச ஞானம், முத்தி அரிது தானே”

     காகபுசுண்டரின்  ஞானப்பாடல் அனைத்துமே  அந்தாதித் தொடையில்
அழகுறக் காணப்படுகின்றது.  காகபுசுண்டர்  உபநிடதம் என்ற தலைப்பிலான
மூன்று பாடல் தொகுப்பும் குறள் வெண்பா தொகுப்பு ஒன்றும் சித்தர் பாடல்
தொகுப்பில் காகபுசுண்டர் பாடியனவாகக் காணப்படுகின்றன.

     யோகம் அறுபத்து நான்கு என்பதை,
“அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
     ஒருபொழுது முண்டுநிலை யோர்”

என்ற குறளிலும் சித்தர் பதினெண்மர் என்பதை,

“சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
 அத்தனரு ளும்புசுண்டன் யான்”

என்ற குறளிலும் புலப்படும் இவர் இப்பதினாறு பாடல் தொகுதியை,