வாறான பிரமத்தில் நடுவே மைந்தா! வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக் கூறாகப் பின்னியடா கீழே பாயுங் கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு; வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே நேராக இருகண்ணிற் பின்ன லாகி நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே. | 8 |
| | |
பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே பத்திலே நரம்புவழி பாயும் போது ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு காரப்பா நரம்பென்ற விழுது வட்டம் கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான் வெற்றிபெற இன்னமுந்தா னுரைக்கக் கேளே. | 9 |
| | |
கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில் கிருபையுடன் தண்டுக்குங் கீழ்மே லாக நாளப்பா தமர்போலே பிடர் மார்க்கம் நன்றாக ஓடுமடா நரம்பி னூடே வாளப்பா அண்டமுட்டி வுயர மைந்தா! வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச் சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே. | 10 |
| | |
பாரடா புருவமத்தி யேதென் றக்கால் பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா! மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே. | 11 |