தொட்டுவிட லாகாது ஞான மார்க்கந் துரிய நிலை நன்றாகத் தோன்று மட்டும் எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத் தெண்ணமெனுந் தியானத்தா லெய்தும் முத்தி; தட்டுகின்ற சீவத்வம் தனக்கில் லாமற் சமாதியுற்றால் நாமதுவே சாட்சாத் காரம். | 11 |
| |
சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம் தத்வாதி வாசனைகள் தாமே போகும்; சூட்சாதி பிராந்தியெனும் மாயா சத்தி தொடராமற் சேர்வதுவே சொரூப ஞானம்; தீட்சையினாற் பிரமாண்டம் பிண்டாண் டங்கள் சிருட்டி முதல் யாவற்றுந் தெரியும் நன்றாய்; காட்சியென்ன ஏகவத்து வொன்றல் லாமற் காண்பதெல்லாம் வியர்த்தமெனக் கண்டு கொள்ளே. | 12 |
| |
கண்டு பார் மூடமெனும் அஞ்ஞா னிக்குக் காணாது சீவான்மா பரமான் மாவும்; தொண்டுபட்டுக் குருமுகத்தில் விசேட மாகச் சுருதியெனும் வேதாந்தம் அப்பிய சித்தே உண்டுமனு பவஞானங் கிர்த்யா கிர்த்யம் யோகிதனக்கு ஏதேனுந் தேவை யில்லை; விண்டுசொல்வோம் நதிகடக்க வோட மல்லால் விடயத்தாற் சாதனங்கள் வீணா மென்றே. | 13 |
| |
வீணல்லோ சாதனப்ர யோச னங்கள் மெய்ஞ்ஞான அபரோட்சம் வந்த போது? வீணல்லோ வேதபா டத்தி னிச்சை வியோமபரி பூரணத்தில் மேவி நின்றால்? வீணல்லோ இருட்டறையிற் பொருளைக் காண விளக்கதனை மறந்தவன்கை விடுதல் போலும் வீணல்லோ தியானதா ரணைக ளெல்லாம்? மெய்பிரகா சிக்கும்வரை வேணுந் தானே. | 14 |
| |
வேணுமென்றா லெள்ளுக்கு ளெண்ணெய் போலும் வித்தினிடத் தடங்கிநின்ற விருட்சம் போலும் | |