காணுகின்ற பூவிலுறை வாசம் போலும் கன்றாவின் பாலிலுள்ள நெய்யைப் போலும் தோணுமயில் முட்டையின்மேல் வன்னம் போலும் தூலமதிற் சூட்சுமந்தான் துலங்கி நிற்கும்; ஆணவத்தாற் சாதனத்தை மறந்தாயானால் அபரோட்ச ஞானமுத்தி யரிது தானே. | 15 |
| |
அரிதில்லை பிரமவியா கிருத சீவன் ஐக்கியமெனுஞ் சந்த்யானம் அப்ய சித்துச் சுருதிகயிற் றால்மனமாம் யானை தன்னை சுருக்கிட்டுச் சிக்கெனவே துறையிற் கட்டிக் குருவுரைத்த சிரவணத்தின் படியே நின்றால் குதியாகு பிரபஞ்ச கோட்டிற் றானும் திரிவதில்லை திரிந்தாலும் மதமி ராது; சீவவை ராக்யமெனுந் திறமி தானே. | 16 |
| |
திரமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம் திருசியசூன் யாதிகளே தியான மாகும்; சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம் சாதனையே சமாதியெனத் தானே போகும்; வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம் வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்; அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான் அஞ்ஞான மவனிடத்தி லணுகா தென்னே. | 17 |
| |
என்னவே அஞ்ஞானி உலகா சாரத் திச்சையினாற் றர்மாத்த வியாபா ரங்கள் முன்னமே செய்ததன்பின் மரண மானால் மோட்சமதற் கனுபவத்தின் மொழிகேட் பீரேல் வின்னமதா யாங்கார பஞ்ச பூத விடயவுபா திகளாலே மேவிக் கொண்டு தன்னிமைய இலிங்கசரீ ரத்தோ டொத்துச் சதாகாலம் போக்குவரத் தாகுந் தானே. | 18 |
| |
தானிந்தப் படியாகச் சீவ ரெல்லாஞ் சகசபிரா ரத்வவசத் தாகி னார்கள்; | |