சந்தேக முமக்குரைக்கப் போகா தையா! சாமிக்கே சொல்லுமையா இதோவந் தேனே. | 14 |
| |
வந்தேனே யென்றுரைத்த வாறு கொண்டு வசிட்டருமே வாயுலர்ந்து காலும் பின்னி இந்தேனே முனிநாதா! சரணங் காப்பீர் என்றுசிவன் சபைநாடி முனிவர் வந்தார். மைந்தனையே யீன்றருளுங் கடவுள் நாதா! மாமுனிவன் வாயெடுக்கப் புசுண்டர் சொல்வார்; சிந்தனைசெய் ஈச்சரனே வந்தேனையா சிவசிவா இன்னதென்று செப்பி டீரே? | 15 |
| |
செப்புமென்ற புசுண்ட முனி முகத்தை நோக்கிச் சிவன் மகிழ்ந்தே ஏது மொழி செப்பு வார்கேள்; கொப்புமென்ற யுகமாறிப் பிறழுங் காலம் குரு நமசி வாயமெங்கே பரந்தா னெங்கே? அப்பு மெந்தப் பஞ்சகணத் தேவ ரெங்கே? அயன்மாலும் சிவன்மூவ ரடக்க மெங்கே? ஒப்புமிந்த யுகமாறிப் பிறந்த தெங்கே? ஓகோகோ முனிநாதா வுரைசெய் வீரே! | 16 |
| |
உரையென்றீ ருந்தமக்குப் புத்தி போச்சு; உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு பரையென்றால் பரைநாடி நிலைக்க மாட்டீர்; பரமசிவன் தானமென்னும் பேரும் பெற்றீர்; இரையென்றால் வாய்திறந்து பட்சி போல எல்லோரு மப்படியே இறந்திட் டார்கள்; நிறையென்ற வார்த்தைகளைச் சொன்னே னானால் நிசங்கொள்ள தந்தரங்கள் நிசங்கொள் ளாதே? | 17 |
| |
கொள்ளாமற் போவதுண்டோ மவுன யோகி; கோடியிலே உனைப்போல ரிடியோ காணேன்; உள்ளாக ரிடியொருவ ரில்லா விட்டால் யுகவார்த்தை யாருரைப்பார் யானுங் காணேன்; விள்ளாமற் றீராது முனிவனே! கேள்; மெஞ்ஞான பரம்புகுந்த அருள் மெய்ஞ் ஞானி; | |