வீர மறலி இவருமுன் வினையறுக்கும் பார வழிஇன்னருளைப்பார். | 21 |
| |
பார்த்த இடமெல்லாம் பரமென் றிருமனமே காற்றனல் மண்நீர் வெளியாம் கண்டவெல்லாம் - மாத்திரண்ட ஐம்புலனு நில்லா ஆசைகளும் நில்லாவே என்புடலும் நில்லாது இனி. | 22 |
| |
இனியசுகம் ஐம்புலனென்று எண்ணாதே நெஞ்சே இனிய சுகமற வாதே - இனியசுகம் கண்டதெல்லா மெவ்வுலகு காணாத இவ்வுலகில் நின்றதோ நில்லாததா. | 23 |
| |
நில்லாமல் ஓடுகின்ற நெஞ்சே நிலையில்லா எல்லாம் பகையா யிருக்குங்காண் - பொல்லாக் கருக்குழியிலே பிறந்த கன்மவினை யானால் திருக்கறுக்க வேணும் தினம். | 24 |
| |
தினந்தினைப் போதாகிலுந்தான் தீதறநில் லாமல் இனம்பிரிந்த மான்போல் இருந்தாய் - தினந்தினமும் ஓங்காரத் துள்ளொளியை உற்றுணர்ந்த நீமனமே ஆங்கார அச்சம் அறு. | 25 |
| |
அச்சத்தால் ஐம்புலனும் ஆங்காரத் தால்மேய்ந்த கச்சத்தா னியச்சயமாய்க் கள்ளதோ - மெச்சத்தான் அண்டமெல்லாம் ஊடுருவ ஆகாச முங்கடந்து நின்ற நிலைதான் நிலை. | 26 |
| |
நிலையறிந்து நில்லாமல் நீபாவி நெஞ்சே அலைமதி போலே தினமும் ஆனாய் - கலையறிந்து மாரனையுங் கூற்றினையும் மாபுரத்தை யும்புகைத்த வீரனையும் தேட விரும்பு. | 27 |
| |
விரும்பித் தனித்தனியே மெய்யுணரா தேமா இரும்புண்ட நீர்போல வேகும் - கரும்பதனைத் தின்றாலல்லோ தெரியும் நெஞ்சே நின் ஐம்புலனை வென்றாலல்லோ வெளிச்ச மாம். | 28 |