வெளிச்சமில்லா வீடே விளக்கேற் றினதாக் களிசிறந்து நின்றதைக்கா நெஞ்சே - வெளிச்சமற தொண்ணூற் றறுதத் துவமொன்றாய்த் தோன்றுங்காண் எண்ணிலிவை காணா திருட்டு. | 29 |
| |
இருட்டனைய மாய்கையா லெவ்வுலகுந் தாய பொருட்டனையே மூடு ஐம்புலனால் - திருட்டுமன வண்டருடன் கூடாதே வாழ்மனமே நாமிருவோர் கண்டுகொள்வோம் காணா தது. | 30 |
| |
காணா ததைக்கண்டால் கண்டதெல்லாங்காணாது வீணாவல் கொண்டுள் மெலியாதே - நாணாதே இந்திரியத் தோடு பிணங்காதே பாவிநெஞ்சே செஞ்சொல்மறை அக்கரத்தை தேடு. | 31 |
| |
தேடினா லைந்துதிரு வக்கரத்தைச் சென்றுவெளி நாடினால் நெஞ்சே நலம்பெறலாம் - வாடியே பொல்லாப் புவிகாணப் போகமதை நம்பாதே எல்லாம் வெயில் மஞ்சளே. | 32 |
| |
மஞ்சனைய கூந்தல் மடவாரைக் கண்டுருகும் பஞ்சமல நெஞ்சே பகரக்கேள் - மஞ்சள் மயங்காணும் இந்தவுடல் மாயவாழ் வெல்லாம் அயன் காணழி சூத்திரம். | 33 |
| |
சூத்திரத்தா லாடும் சுழுமுனையைத் தான்திறந்து பார்த்திருந்தால் வாராது பாவமெல்லாம் - சூத்திரத்தைப் பாராமலேயிருந்து பாவிமன மேபிறக்க வாராம லேயிருக்க வா. | 34 |
| |
வாசி தனைப்பிடித்து வண்கனலோ டேசேர்த்துச் சீசீ யெனவே திரியாமல் - மாசி இருளா னதைச் சேர்த்து இருந்தாயே நெஞ்சே பொருளா னதைமறந்து போட்டு. | 35 |
| |
போட்டுவிக்கும் பொல்லாப் புழுச்சொரியும் நாய்விடக்கே கூட்டங் குலைந்து குலைந்திடுமுன் - காட்டிடில் | |