பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்511


விட்டுவிட இயலாது, அல்லது அது போகாது என்று கூறும் இவர் பிற்காலச்
சித்தர்  என்பது  ‘பாடானது’,   துற்கந்தம்’  முதலான  சொல்லாட்சிகளால்
புலனாகிறது.

நாமசொரூபமே சித்தி - அதை
நாடித் தெளிந்து கொண்டாலல்லே முத்தி

      என்று முத்திக்கான வழியைச் சொல்கின்றார்.

     பரிபூர ணானந்த போதம் - சிவ
     பரப்பிர்ம மான சதானந்த பாதம்

உரிதாம் பரம்பொருளை உள்ளு - மாயம்
     உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளு
அரிதான சிவநாமம் விள்ளு - சிவன்
     அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு.
1
  
துச்சமு சாரவி சாரம் - அற்பச்
     சுகமது துக்கமதாம் வெகு கோரம்
நிச்சய மானவி சாரம் - ஞான
     நிர்மல வேதாந்த சாரமே சாரம்.
2
  
கற்பனை யாகிய ஞாலம் - அந்தக்
     கரணங்க ளாலே விளைந்த விசாலம்
சொற்பன மாம்இந்த்ர சாலம் - அன்று
     தோன்றி விட்டாலது சூட்சானு கூலம்.
3
  
அற்பம தானப்பிர பஞ்சம் - அது
     அனுசரித்தாலே உனக்கிது கொஞ்சம்
நிற்பது அருள்மேவி நெஞ்சம் - அன்று
     நிகரில்லை நிகரில்லை மெய்ஞ்ஞான பொஞ்சம்.
4
  
ஆங்காரத் தால்வந்த கேடு-முதல்
     ஆசையைக் கட்டோடே அப்பாலே போடு
தாங்காம லானந்த வீடு-அன்று
     தாக்கும னோலயந் தானாகக் கூடு.
5