பக்கம் எண் :

578சித்தர் பாடல்கள்

அல்லலெல்லம் நீக்கி அறிவைஅறிவால் அறிந்து
வல்லசித்தன் என்றே மகிழ்வுற்றேன் மாங்குயிலே.

14
  
ஆனந்தம் பொங்கி அறிவே மயமான
ஞானம் அறிந்து நலமுற்றேன் மாங்குயிலே.

15
  
மெய்பொருளைக் கண்டுடனே வேதாந்தவீடடைந்த
வைப்பதனில் ஒன்றி மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே.

16
  
நாதாந்த உண்மை நடுவறியா மாந்தருக்கு
வேதாந்தப் பேச்சதுவும் வேண்டுமோ மாங்குயிலே.

17
  
நித்திரையும் விட்டு நினைவைஅறிவிற்செலுத்தி
சித்தியெலாம் பெற்றுத் தெளிவுற்றேன் மாங்குயிலே.

18
  
பேச்சொடுங்கி நின்ற பிரமநிலையைஅறிந்தோர்
ஏச்சுக்கு இடமற்று இருப்பார்காண் மாங்குயிலே.

19

காணாப் பொருளதனைக் கண்டுபிரமானந்தமுற்று
வீணாள் ஒழித்துமுத்தி வீடடைந்தேன் மாங்குயிலே


20

அருள்வெளியி னுட்பொருளை ஆராயமோனக்
குருமொழியை அன்றியில்லை கோதையெனும் மாங்குயிலே


21

அத்துவிதம் தன்னை அதுவதுவாய்க்காண்பதற்குத்
தத்பதத்தைக் காட்டித் தருவாயே மாங்குயிலே.


22

நம்பி உனைப்பணிந்து நாடோறும்பூசிப்பதற்குத்
தொம்பத்தை என்று துலக்குவாய் மாங்குயிலே.


23

நிசிபகலென் றெண்ணாது ஞேயஞா னத்தால்
அசிபதத்தை நீயென் றருள்செய்வாய் மாங்குயிலே.


24

நித்தநித்தம் என்னுளத்தில் நீஇருப்பதுஉண்மை எனில்
தத்துவம் சிற்பொருளைத் தந்தருள்செய் மாங்குயிலே.


25

சுத்த நிராமயத்தின் தோற்றத்தினால்உதித்த
வத்துவெலாஞ் சுத்தமயம் அன்றோ மாங்குயிலே.


26

தேறாப் பொருள் அனைத்துந் தேறித்தெளிவதற்கு
மாறா நின் இன்பமது வாய்க்குமோ மாங்குயிலே.


27

அசரசரத்தின் உற்ற அண்டபிண்டம் பல்லுயிரும்
நசிதம் எனக் கண்டறிந்து நின்றேன் நான் மாங்குயிலே.


28