பக்கம் எண் :

10தமிழ்ஒளி கவிதைகள்

கீச்சிட் டலறினன்! வீழ்ந்து விட்டான்! - பையன்
        கீரைத் தண்டடொத்த வுடல்தளர்ந்தே!
மூச்சில்லை! ஓடியே அக்கிழவன் - பிள்ளை
        முகத்தில் முகம்ஒற்றிச் சாய்ந்துவிட்டான்!

காளியும் கூளியும் காக்கவில்லை! - மூடக்
        கட்டுக் கதைகளை நம்பியதால்!
தேளையும் பாம்பையும் கும்பிடுவார் - இவர்
        தீமை அடைந்துமே செத்திடுவார்!

வேடிக்கை பார்த்தவர் ஓடிவிட்டார்! - அங்கு
        வீழ்ந்த இரண்டுடல் வேதனையில்
கூடிக் கிடந்தது; குள்ளத்தமிழர் போல்
        குருடாகி நின்றதக் கம்பமுமே!

‘குயில்’ - 1947