மாயையின் கூற்று :
(வேறு)
‘அன்றென அஃ”தென
அவள்மொழி கின்றனள்:
“அலைகளின் மகிழ்ச்சி யிடைஇ
இன்றிவண் ஒருகுரல்
இருசெவி உட்புகும்!”
என்றனள் இனிமை யுடன்!
“உதயமும் இருளும்ஓர்
உண்மையைக் கூறிடும்!
‘ஓ’வெனக் கதறி நிற்கும்
இதயம்அஃ தேற்றிடும்!
இவைஇவை அலைகளில்
இயன்றிடும் நாதம்” என்றாள்!
“இருளுலாம் உலகினில்
எதிர்மறை வரும்! ஒளி
என்றநற் பேரை எய்தி!
அருளுலாம் செய்தியை
அலைகளிற் கேட்கிறேன்!
அவையவை சொல்லு மாறே!
(வேறு)
இவ்வணம் மாயை உரைக்க
ஏந்திய வெண்மலர் கொண்டு
செவ்விதின் அலைகள் புரண்டு
சேர்ந்தன அவளிணை அடியை!
பொன்றிகழ் மங்கை பதத்திற்
பூந்துணர் வைத்து வணங்கி
மின்றிகழ் அலைகள் இறங்கி
மெல்லென மேவின ஆற்றில்!
|