மேட்டிடை அலைகள் புகுந்து
மெத்தென வைத்தவெண் மலரைச்
சூட்டினர் மன்னர் எடுத்துச்
சுரிகுழல் மாயை தனக்கு!
(வேறு)
அக்கணம்,
நறுமணம் பொங்கி நாற்றிசை சென்று
சொன்னநற் செய்தி துக்கம் தொலைந்த
ஒலியாய் ஆற்றில் ஒலித்துச் சென்றதே!
மன்னர் :
(வேறு)
ஆற்றிடை வெண்ணுரை
போன்று குழலிடை
ஆய்மலர் தோன்றுதம்மா!
காற்றிற் கலந்தது
காவின் மணம்! இஃது
கற்பனை போன்றதம்மா!”
மாயை :
நீள நெடுத்திரை
நீட்டும் பரிசிது
நீதிபடைத்துப் புவி
ஆள வரும்உயிர்
அஃது தரும் மணம்
ஆகி நிறைந்த தையா!
|